நாட்டு சர்க்கரையில் இருக்கு அசத்தல் நன்மைகள்!
.jpeg)
பொதுவாக, சர்க்கரையில் அதிக கலோரிகள் இருப்பதாலும், நீரிழிவு (சர்க்கரை) நோய் எளிதாக வர வாய்ப்பு இருப்பதாலும் பலரும் சர்க்கரையை சாப்பிட பயப்படுவார்கள். அதுவும் சமீபத்தில் வரும் சர்க்கரை, ‘அஸ்பார்ட்டம்’ என்று சொல்லப்படுகிறது. இது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மக்கள் இனிப்பு என்ன சாப்பிடலாம் என்று கேட்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் பெரிய மருந்தே இந்த நாட்டு சர்க்கரைதான். மேலும், தேனும் ஒரு சிறந்த இனிப்பு மருந்துதான். கிராமங்களில் ஒரிஜினல் தேன் எளிதில் கிடைத்துவிடும். ஆனால், நகர்ப்புறங்களில் கிடைக்காது. அதனால் நாட்டு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். அது ஈஸியாகக் கிடைத்து விடும்.
நாட்டு சர்க்கரை என்பது கரும்பு சாறில் இருந்து வெல்லப்பாகு எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரையாகும். வெள்ளை சர்க்கரையை அந்த நிறத்திற்குக் கொண்டு வருவதற்காக ஏராளமான கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால், அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கின்றன.
சருமப் பளபளப்பு: வைட்டமின் பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நாட்டுச் சர்க்கரையில் அடங்கியுள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும். நாட்டு சர்க்கரையை பயன்படுத்தி சருமத்தை ஸ்க்ரப் செய்வது, இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.
எடை குறைப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு நாட்டு சர்க்கரை ஒரு சிறந்த நண்பனாகும். நாட்டுச் சர்க்கரையைப் பொறுத்தவரை குறைந்த அளவிலான கலோரிகள் மட்டுமே இருப்பதால், உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க விரும்புவோர் தாராளமாக நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைப்பதில் அதிக பலனளிக்கிறது.
மாதவிடாய் தசை பிடிப்பு: மாதவிடாய் தசைப்பிடிப்பு என்பது பெரும்பாலான பெண்களை ஆட்டிப்படைக்கூடியது. நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்க பண்டைய கால மருத்துவ முறைகளில் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தப்பட்டுள்ளது. வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், நாட்டுச் சர்க்கரை கலந்த இஞ்சி டீயை பருகப் பரிந்துரைக்கப்படுகிறது.